ஞாயிறு, 13 அக்டோபர், 2024

 

பனியில் நனைந்த


 சூரியன் 



சூரியனை வென்ற உன் பேரொளியில்

நான் வெளிச்சம் பெறவில்லை

என்பதற்காகவா ஒரே நொடியில்

அனைத்து விட்டாய்?

கம்பனை வென்ற உன் காவியத்தை

நான் படிக்கவில்லை

என்பதற்காகவா ஒரே நொடியில்

கிழித்து விட்டாய்?

தாஜ்மஹாலை வென்ற உன்

காதல் சின்னத்தை நான் பார்க்கவில்லை

என்பதற்காகவா ஒரே நொடியில்

உடைத்து விட்டாய்?

பாற்கடல்களை வென்ற உன் கோப்பையில்

நான் பருகவில்லை

என்பதற்காகவா ஒரே நொடியில்

கவிழ்த்து விட்டாய்?

இமயங்களை வென்ற எனக்கான உ ன் காதலை

நான் கவனிக்கவில்லை

என்பதற்காகவா ஒரே நொடியில்

காணாமல் போனாய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  பனியில் நனைந்த  சூரியன்  சூரியனை வென்ற உன் பேரொளியில் நான் வெளிச்சம் பெறவில்லை என்பதற்க...